Wednesday, December 4, 2013

முகவரியைத் தொலைத்தவர்கள்

என் மாமியார்
வீட்டிலிருந்து - நேற்று
என் நான்கு வயது மகன்
அலைபேசியில் கேட்டான்
ஏன் எப்போதும்
உங்கள் வீட்டிற்குப்
போகிறாய் எங்கள்
வீட்டிற்கு வராமல்?
சத்யாவும் தனியாக
வருகிறாள் என்று...
சில வினாடிகளில்
என் மாமியாரும் - நான்
சொல்லிக் கொடுத்தேன்என்றா
நினைக்கிறீர்கள்? என்றார்
என்னால் முடிந்தது
புன்னகைக்க மட்டுமே...!
ஏனெனில்,
சுய முகவரியைத்
தொலைத்தவர்கள் நாங்கள்...!

No comments: