Saturday, January 3, 2009

எண்(ன்) ராசி...

எல்லா 7-ம் எண்
காரர்களைப் போலவே
என் வாழ்வும் இருக்கும்
என நம்பினேன்...
பொய்த்து விடும் போலிருக்கிறது...

துன்பம்

ஏன் எல்லோரும்
என்னைத் துன்புறுத்துகிறீர்கள்?
என்றாய்...
சற்றே சிந்தனை செய்...
உனக்கே புரியும்
உன்னைத் துன்புறுத்துவது
யார் அல்லது எதுவென்பது!

Tuesday, December 30, 2008

காதல்...

காதலுக்கு
கண்கள் மட்டும் இல்லை கண்ணே...
அறிவும் கூடக் கிடையாது!
பைத்தியமாவதிலும்
சுகமானதுதான் காதல்!

Monday, December 29, 2008

ஆறுதல்

ஜலதோஷம்
உடல் ஒத்துழைக்கவில்லை...
உன் மடி தேடுகிறேன்
உடனடியாகக் கிடைக்காது
எனத் தெரிந்தும்!

Sunday, December 28, 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

ஒரு வருடம்
நீ பிறந்தாய்
பல வருடங்கள்
அதைக் கொண்டாடினாய்
பல சொந்த பந்தங்களுடன்...
இந்த வருடமும்
கொண்டாடுகிறாய்...
உனக்கே உனக்கான
என்னுடன் - முழுவதும்
புதிதாக!

Thursday, December 25, 2008

அத்தைகள்...

உன் அன்னையை - நான்
அழைக்கவில்லை அத்தை என்று..
அதற்காக, என் அன்னையை - நீ
வரவேற்கக் கூடத்
தயாரில்லை என்பது?

Wednesday, December 24, 2008

நீ கவிதை எனக்கு

தினம் ஒரு
கவிதை உன்னைப்பற்றி
எழுதலாம் என எண்ணுவேன்...
ஆனால்,
அடுத்த கணமே - அந்த
எண்ணம் எனக்கு
மறைந்துவிடும் - ஒரு
கவிதையைப் பற்றியே
கவிதை எழுதுவதா என்று...