Saturday, November 11, 2017

கவிதை

இலக்கியமும்
இலக்கணமும்
கைகோர்த்தால் - அது
மரபுக்கவிதை
இலக்கணமே
பாராமல் எழுதினால்
புதுக்கவிதை
வார்த்தைகளுக்கே
பஞ்சமென்றால்தான்
ஹைக்கூ கவிதை....!

Friday, November 10, 2017

மழை

விட்டு விட்டுப்
பெய்தாலும்
விடாமல்
பெய்து கொண்டே
இருக்கிறது
விடிய விடிய..!

Tuesday, November 7, 2017

மழை

சாளரத்தில்
வழியும் நீரின்
தெளிவு
பறைசாற்றுகிறது
இன்றைய மழையின்
கனஅளவை...!

Sunday, November 5, 2017

ஏறு தழுவுதல்

காங்கேயத்தில் காளைகள்
வளர்த்த பெருமைக்காகவா
இச்சிலை?

இல்லவேயில்லை...!
நம் இல்லங்கள்தோரும்
இனிமையைத் தரும்
கோமகளின் துணைவனும்
அவ்வில்லத்தை ஆளும்
குலமகளின் கணவனும்
கட்டித்தழுவிக்
காதலையும் வீரத்தையும்
ஒருங்கே பறைசாற்றிடத்தான்...!

வீரமும் விளையாட்டுமே
எங்கள் குறிக்கோள்...!

தோற்றுப்போய்த்
தோட்டாவுக்கு
இரையாகும்
பந்தையக் குதிரைகளல்ல
நாங்கள்....!

அடடா அவள் தேவதை

செதுக்கி வைத்த
சிலையாய் உடலுமில்லை...!
மடிப்புக் குறையா
உடையுமில்லை...!
மந்தகாசப்
புன்னகையுமில்லை...!
நுணி நாக்கில்
ஆங்கிலமில்லை....!
சுங்கிடிச் சேலையில்
சிந்திய வேர்வையில்
சந்தமாய்ப் பாடி
வேப்பமரக் கிளையில்
தூளியிட்டு
கைக்குழந்தையைத்
தூங்கவைத்துக்
கழனியில் நடவு நட்டு
அந்தியில் வீடுதிரும்பும் - அவள்
ஒரு தேவதைதான்....!

குறிஞ்சி மலர்

பண்ணிரண்டாண்டுகளுக்
கொருமுறை - நீ
மலர்வது
கோபுரங்களில்
கொட்டிவைத்த தானியங்களை
மாற்றிக் குடமுழுக்காட
உணர்த்தவோ?

சுங்கச்சாவடி

சொந்தமாக ஒரு
வாகனம் வாங்கி
அதை சாலையில்
ஓட்ட வரியும் கட்டி
எரிபொருளுக்கு நிகராய்
சுங்க வரியும் கட்டி
ஓடிய வாழ்க்கை
ஒரு நாளாவது
முடிவுக்கு வந்தது
மகிழ்ச்சியே...!

பொங்கல்

கழனியில்
கதிர்த்தொழில்
புரியக் கைகொடுக்கும்
கதிரவனை வணங்கிக்
கலப்பையில் கட்டுண்டு
கைச்சாட்டைச் சுழற்றலுக்கடங்கிக்
கீறிட்டு விதைநெல்லை
பூமாதேவியின் கருவறையிலிட்டு
விருத்தி செய்ய
உதவிடும் காளைகளைச்
சீராட்டிக் கொண்டாடி
மனதிற்கினிய
மங்கையைக்
கண்டு காமுற்றுக்
கைத்தலம் பற்றிடவும்
உழவும் உறவும்
மேம்பட உண்டான
தைத்திருநாட்கள் வாழ்த்துக்கள்...!

தும்பை

நான் போருக்குப்
போகிறேனென்று
சொல்லாமல் சொல்லிச்
செல்ல சங்ககால
மன்னர்க்கெல்லாம்
உதவிய மலர் கொண்ட செடி....!

என் பதின் பருவத்தில்
இம் மலரின்
மது மயக்கத்தில்
கிறங்கிக் கிடக்கும் - வண்ணத்துப்பூச்சி
என்ற அறிவியலாற்றலோடு
அதை வேட்டையாடிப்
பட்டினும் மெல்லிய
அதன் இறகைத்
தொட்ட கணத்தில் - என்
விரல்களில் ஒட்டிய
வண்ணத்தைப்
பார்த்த பேருவகை
திரும்பிப் பார்க்கிறதென் மனதில்....!

வாரக்கடைசி

சனிக்கிழமையாவது
ஏழு மணிவரை
தூங்கலாமென்று நான்
நினைத்தாலும் - இந்த
ஞாயிறுக்குப்
பொறுக்கவில்லை....!
காலதர் வழியே
என் விழியிமை
தாண்டி வெம்மையைக்
கொட்டுகிறது...!

அறிவு

அந்திப்பொழுது
வந்ததென
ஆர்ப்பரித்து
அரைவயிற்றோடு
கூடு திரும்பின
காலம் தவறிய
பிற்பகல்க்
கார்மேகம் கண்ட
பறவைகள்....!

Saturday, November 4, 2017

மழை

விண்மீனில்லாத
விண்ணில் ஏதோ
ஓர் மூலையில்
கார்மேகம் சூழ்
முழுநிலவும்
சில்லென்ற
கொண்டல் காற்றின்
தீண்டலும்
இங்கொன்றும்
அங்கொன்றுமான
சிறுதூறலும்
சொன்ன செய்தியும்
பொய்த்துத்தான்
போனதின்றிரவு....!

இல்லம் தேடி

தூவான வெளிச்சத்தில்
இளங்குளிர் காற்றில்
இதமான வேகத்தில்
ஈருருளியில்
வந்ததே சுகமெனக்கு - இன்று..!

நாணம்

என் தெருவோரத்தில்
கருநீலத்தில் தளிர்விட்டு
என் தமையனின்
தீண்டலில் நாணித்
தன் தலை கவிழ்ந்தாள்
தொட்டாச்சிணுங்கி....!

இருப்பிடம்

இன்று முழுவதும்
பெய்து தீர்த்துக்
கொண்டிருக்கும்
மழைக்குக்கூடத்
தெரிகிறது எது தன்
இடமென்று....!

குளிர்

கோடையின் வெம்மையில்
குளிர் தேடிய மனது
வாடைக் குளிரை
ஏனோ வெறுக்கிறது...!

சென்னையின் மழைக்காலம்

சென்னை பெருமாநகராட்சியில்
பெரும் மழை வெள்ளம்
ஏரிகளை அழித்து 
வீடுகள் மட்டுமல்ல 
சாலைகளும் தான் போட்டிருக்கிறோம்