Saturday, November 4, 2017

இல்லம் தேடி

தூவான வெளிச்சத்தில்
இளங்குளிர் காற்றில்
இதமான வேகத்தில்
ஈருருளியில்
வந்ததே சுகமெனக்கு - இன்று..!

நாணம்

என் தெருவோரத்தில்
கருநீலத்தில் தளிர்விட்டு
என் தமையனின்
தீண்டலில் நாணித்
தன் தலை கவிழ்ந்தாள்
தொட்டாச்சிணுங்கி....!

இருப்பிடம்

இன்று முழுவதும்
பெய்து தீர்த்துக்
கொண்டிருக்கும்
மழைக்குக்கூடத்
தெரிகிறது எது தன்
இடமென்று....!

குளிர்

கோடையின் வெம்மையில்
குளிர் தேடிய மனது
வாடைக் குளிரை
ஏனோ வெறுக்கிறது...!

சென்னையின் மழைக்காலம்

சென்னை பெருமாநகராட்சியில்
பெரும் மழை வெள்ளம்
ஏரிகளை அழித்து 
வீடுகள் மட்டுமல்ல 
சாலைகளும் தான் போட்டிருக்கிறோம்

Sunday, September 23, 2012

பெஞ்ச்


வேலையிலிருந்தும்
வேலையில்லாமல்
இருப்பது எவ்வளவு
வேதனையானது என்பது
இருந்து பாருங்கள் தெரியும்
இன்பார்மேஷன் டெக்னாலஜி
பெஞ்சில்...!

Friday, December 30, 2011

2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

2011-ல் என் தலையில்
இருந்த 2 நரை முடிகள்
இன்று 20 -ஐ
தொட்டுவிட்டன...!
போன மாதம் வெளியான
மயக்கம் என்ன திரைப்படம்
இன்று பழையதாகிவிட்டது...!
இப்படி எல்லாமே
ஏதோ ஒரு வகையில்
மூப்படைந்து கொண்டேதானிருக்கிறது...!
ஆனால்,
இந்த வருடமும்
வளர்ச்சியும் மட்டும்...?
வாருங்கள்...
வரவேற்போம்
எப்போதும் போலவே
இப்போதும்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!